மானிப்பாய் பிரதேச சபையின் காணிக்குள் சட்டவிரோத செயல்களா – ஆளுநர் செயலகத்தில் முறைப்பாடு!

மானிப்பாய் பிரதேச சபையின் காணிக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள, மானிப்பாய் பிரதேச சபையின் காணி ஒன்று நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த காணியை விட்டு இராணுவம் வெளியேறிய நிலையில் அதனை பிரதேச சபை பொறுப்பேற்றது.

இந்நிலையில் இன்றையதினம் அந்த காணியில் சந்தேகத்துக்கு இடமான முறையிலான ஆள் நடமாட்டம் காணப்பட்டது.

குறித்த காணியில் பிரதேச சபையினால் 24 மணிநேரமும் பாதுகாப்பு ஊழியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் பாதுகாப்பு ஊழியர் தவிர்ந்த ஆண், பெண் என மேலும் இருவர் அந்த காணியினுள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பிரதேச சபையிடம் அழைப்பு மேற்கொண்டு வினவியபோது அங்கு ஒரேயொரு பாதுகாப்பு ஊழியர் மட்டும் தான் கடமையில் இருப்பதாகவும், வேறு யாரும் இல்லை என கூறப்பட்டதுடன் இது குறித்து விசாரணை செய்வதாகவும் கூறப்பட்டது. பின்னர் மீண்டும் சிறிது நேரத்தின் பின்னர் பிரதேச சபைக்கு அழைப்பு மேற்கொண்டவேளை செயலாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் இந்த விடயம் குறித்து ஆளுநரின் செயலாளருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக ஆளுநரின் செயலாளர் உறுதியளித்தார்.

குறித்த காணியில் இருந்த இரும்பு படலையானது நேற்றையதினம் களவாடப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே இன்றையதினம் அந்த காணியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டமும் காணப்பட்டது.

Leave a Reply