தேர்தலுக்குச் செல்வதற்கான மனப்பான்மை அரசாங்கத்திடம் இல்லை..! இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

 

நாட்டை முற்னேற்றுவதையே அரசாங்கம் பிரதான நோக்கமாக கொண்டுள்ளதால் தற்போது தேர்தல் ஒன்றிற்கு செல்வதற்கான மனப்பாங்கு அரசாங்கத்திடம் இல்லை என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர்.

ஆனால் இம்முறை ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவாற்கு கடைகளில் மக்கள் அணிதிரள்வதை காணமுடிகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் பலனாகவே இந்த மாற்றம் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை தொடரவே விரும்புகிறோம். சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முகம்கொடுக்க தயாராக இருக்கிறோம் என இராஜாங்க அமைச்சர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply