மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..! ஒருவர் வைத்தியசாலையில்!

 

மாத்தறை – கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவமானது, இன்று அதிகாலை  இடம்பெற்றுள்ளது. 

கனங்கே – ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற லொறியினை சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இருப்பினும், உத்தரவை மீறி லொறி சென்றுள்ள லொறியை  குறி வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதன்போது, லொறியிலிருந்த மூவரில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

சந்தேகநபர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply