காசல்ரீ நீர்த் தேக்கத்திற்க்கு நீராட சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி….!

காசல்ரீ நீர்த் தேக்கத்திற்க்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று மதியம் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த , டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய நோர்வூட் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு மரணித்து உள்ளார் .

 உறவினர்களுடன் நீராட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய நிலையில் மரணித்த மாணவன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி  கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து நோட்டன் பொலிஸார்  தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.

உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்கபட்டுள்ளது .

நாளை காலை உடற் கூற்று பரிசோதனை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் இடம் பெற்ற பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க படஉள்ளது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *