நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் – 30 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு..!

கொழும்பு – அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும், மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், 

எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. 

காயமடைந்த மாணவர்கள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply