பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

பதுளை – வினீதகம வீதி குண பகுதியில் மின்சாரம் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 

வினீதகம வீதி குண பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த வயோதிபர் தனது தோட்டத்துப் பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கு சட்டவிரோதமான முறையில் மின்வேலியை அமைத்துள்ளார்.

நேற்று இரவு வழமைபோல் மின்வேலியைப் பொருத்துவதற்குச் சென்ற போதே குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதியவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

Leave a Reply