
அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரால் அறியப்படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசிரியரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் அதாவது அத்தாக்குதல் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் அதனுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். பின்னர் தன்னிடம் கற்ற மாணவர்களிடையே அடிப்படைவாதத்தை தூண்டி, பிற மதத்தவர்கள் மீது பகைமை உணர்வை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

