தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரட்ன விற்கு யாழில் அஞ்சலி!

தமிழர்களுக்காக குரல் கொடுத்த இடதுசாரி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன விற்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசுய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பொன்மாஸ்டர் தலைமையில் இன்று மாலை இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது விக்கிரம்பாகு கருணாரட்னவின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நினைவஞ்சலி நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்பள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply