கோத்தாவின் சட்டத்தால் இலங்கைக்கு ஆபத்து..!

பொது சுகாதார அவசரகால நிலைமைகளுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி இருந்தோமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது.,

நேற்று நள்ளிரவில் இருந்து அவசரகால நிலமை நாடு பூராகவும் பிரகணப்பட்டு இருந்தது.நாட்டிலே உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகணப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்த சட்டத்தின் கீழே நாட்டுக்கு ஆபத்து இருந்தால் அதோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு தான் இந்த சட்டத்தை பாவிக்க முடியும்

இதனால் தான் பொது மக்கள் பொது சுகாதார அவசரகால நிலமைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி இருந்தோம்.

அதற்கான ஒரு தனிநபர் சட்ட மூலத்தை நான் பாராளுமன்றத்தில் பிரகரித்து இருக்கின்றேன்.அதை எடுத்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.அப்படி இருந்தும் அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற தோரணையிலே இதனை செய்து இருக்கிறார்கள் .இதன் ஆபத்து என்னவென்றால் இதைத் தொடர்ந்து முற்முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும் ஜனாதிபதி .

ஜனாதிபதி தான் விரும்பிய சட்டங்களை அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும் .சட்டம் ஆக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கையிற்கு சென்றடையும் இதனை நாங்கள் வலுவாக கண்டிக்கின்றோம்.

Leave a Reply