சிவனொளிபாதமலை பருவகால ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்

2024ஆம் மற்றும் 2025 ஆம்  ஆண்டுகளுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று.

இன்று (05) நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில்  சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்து உரையாடலில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட, நோர்வூட் உதவி அரசாங்க அதிபர், ஹட்டன், நல்லதண்ணி, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட்,வட்டவளை, கினிகத்தேன, நோட்டின் ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள், தனியார் பேருந்து நிலையம் அதிகாரிகள், ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகள், மஸ்கெலியா வைத்திய அதிகாரி, பொது சுகாதார அதிகாரிகள், மின்சார சபை அதிகாரிகள், தேசிய நீர் வடிகால் அமைப்பு அதிகாரிகள், வன பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுடன் நல்லதண்ணி வர்த்தகர்கள் பொதிசுமக்கும் தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அத்துடன் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

டிசம்பர் மாதம் 15 ம் திகதி அன்று பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ள சிவனொளிபாதமலை பருவகாலத்தையொட்டி யாத்திரிகள் நலன் கருதி சுத்தமான குடிநீர், பாதுகாப்பு,  தடை இன்றி மின்சாரம், போக்குவரத்து வசதிகள், அரச தனியார் பேருந்து இணைந்து நடாத்தும் புகையிரத சேவை, அவசர அம்பூலன்ஸ் சேவைகள், பாதுகாப்பு போன்ற சேவைகளுடன் யாத்திரிகர்கள் நலன் கருதி விலை கட்டுப்பாடு அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் சட்ட விரோதமாக ஈடுபட்டு வரும் நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சாதாரண உடையில் பொலிசார் ஈடுபடுத்த நடவடிக்கை வனப் பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எதிர்வரும் 14ம் திகதி இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து மூன்று வழி யாக சுவாமிகள் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *