காத்தான்குடியில் பார்வையற்ற சிறுவன் அல் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளார். புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இரண்டு கண்களும் பார்வையற்ற முக்பில் சினான் எனும் சிறுவன் புதிய காத்தான்குடி- 01, பதுரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதி நேர ஹிப்ழு (அல்குர்ஆன்) மனனப் பிரிவில் அல்குர்ஆனை மனனம் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி செவிப்புலன் உதவியுடன் தனது 12 வது வயதில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டத்தை பெற்றுள்ளார்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA