குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஹுமுவ பிரதேசத்திலுள்ள வெல்யாயே கால்வாயில் வீழ்ந்து நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குபுக்கொடுவ , அனுக்கனே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஆவார்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 8ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, இந்தக் கால்வாயில் தவறி விழுந்து, உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.