அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CIDயில் குவியும் முறைப்பாடுகள்..!

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் மற்றும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம்(23) முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இனவாதத்தை தூண்டும் வகையில் அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை நேற்றையதினமும்(22)  ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய இணைப்பு
இதேவேளை வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நாமல் குமாரவும் இன்றையதினம்(23)  CIDயில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் நாமல் குமார கருத்து தெரிவிக்கையில்,
ஆவா கும்பல் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு இராணுவ முகாம்களுக்குள் புகுந்து பஞ்சம் கேட்பதாகவும், பிரபாகரனைக் கடவுளாகக் கருதுகிறதாகவும், உண்மை பேசுபவர்களை இராணுவம், காவல்துறை மற்றும் சி.ஐ.டி.யால் கொல்லப்படுவதாகவும், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்களை அமுல்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும்
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தொடர்பில் இங்கு அவதானம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பயங்கரவாதத் தலைவர் பிரபாகரனின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கனடாவின் ரொறன்ரோ நகரை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்து வருவதோடு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி ஆட்சி அதிகாரம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தும் பின்னணியில், இம்மாதம், எதிர்வரும் சில தினங்களில் மாவீரர் வைபவங்கள் பலவற்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவேந்தல் இருப்பதாக அரசுக்கு அறிவித்துவிட்டு பிரபாகரனை கடவுளாக காட்டி வழிபாடுகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டார்கள்.
ஆகவே, இவற்றைக் கவனத்தில் கொண்டு இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் தெரிவித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *