புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்துக்கு மேலதிகமாக ஜனாஸாக்களை
(மரணமான முஸ்லிம் மக்களின் உடல்களை) ஏற்றி செல்கின்ற வாகனம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினரிடம் ஏற்கனவே ஜனாஸாக்களை ஏற்றி செல்கின்ற வாகனம் சேவையில் இருக்கின்ற நிலையிலையே,
இந்த புதிய வாகனமும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த பெயரை சொல்ல விரும்பாத சமூக சேவையாளரும்,
தனவந்தருமான ஒருவரினால் இந்த புதிய வாகனம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஜனாஸாக்களை ஏற்றி செல்கின்ற வாகனத்தை புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தினரிடம் உத்தியோபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு,
நேற்று (22) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி அவர்கள், இந்த ஜனாஸாக்களை ஏற்றி செல்கின்ற வாகனத்துக்கான சாவியை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவரும்,
புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹியிடம் உத்தியோபூர்வமாக கையளித்தார்.
புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் சகல அங்கத்தவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஜனாஸா நலன்புரிச் சங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த வாகனமானது முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாத்திரமல்லாது சகோதர இன பிரேதங்களையும் ஏற்றிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.