இன்று (24) திருகோணமலை மாவட்டத்தில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை,
தேசிய மற்றும் சர்வதேச பரிந்துரைகளை மேற்கொள்ளலும், மனித உரிமை முறைப்பாடுகளை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான பயிற்சி செயலமர்வு.
திருகோணமலை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இசைடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேசங்களில் இடம்பெற்ற நில சுவிகரிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலங்களை மீட்கும் செயற்றிட்டத்தின்,
இரண்டாம் அமர்வாக இச் செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நிறுவனத்தின் இணைப்பாளர், பிரதி இணைப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் 45ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இப்பயிற்சி செயலமர்வானது AHRC யின் நில மீட்பு செயற்றிட்ட குழுவின் செயற்பாட்டாளர்களான உதவிக்கணக்காளர் செல்வி சஞ்சலிதா மற்றும் செல்வி லீனா மற்றும் PCCJ நிறுவனத்தின் கணக்காளர் செல்வி பிரியாழினி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் போது பங்குபற்றுனர்களினால் மனித உரிமை சார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அவர்களால் பல ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.