நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தியால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று(09) பிற்பகலில் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, தம்மை அச்சுறுத்தியதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுகாதாரத் தொண்டர்களின் கடிதம் மூலமாக அழைப்பின் பேரிலேயே தான் வைத்தியசாலைக்குச் சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்தவர்,
சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.
மூன்று வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தொண்டர்கள் எனக்கு முறைப்பாடு செய்தார்கள். அதன் பிரகாரமே நான் வைத்தியசாலைக்குச் சென்றேன்- சென்றார்.