இந்தியாவில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் whatsapp கணக்குகள் முடக்கம்!

<!–

இந்தியாவில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் whatsapp கணக்குகள் முடக்கம்! – Athavan News

இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதிவரை 30 இலட்சம் whatsapp  கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை 30 இலட்சத்து 27 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழிநுட்ப விதிகளின்படி 50 இலட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்ட மிகப் பெரிய டிஜிட்டல் தளங்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply