எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் – அரசாங்கம்

<!–

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் – அரசாங்கம் – Athavan News

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறையுமென எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறையுமென தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply