மாற்றங்களை ஏற்படுத்த முடியாத நிபந்தனைகளை முன்வைத்த சர்வதேச நாணய நிதியம்? அமைச்சர் விளக்கம்

 

சர்வதேச நாணய நிதியம் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத நிபந்தனைகளை முன்வைக்கவில்லை. எமது வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள பொறிமுறைக்கு உட்பட்டு தான் நிவாரண திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

அதேவேளை நாணய நிதியம், மாற்றங்களை ஏற்படுத்த முடியாத நிபந்தனைகளை முன்வைக்கவுமில்லை.

நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவம் தொடர்பில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், எம்மால் சில விடயங்களை மாற்ற முடியும். 

இணக்கப்பாட்டிலுள்ள நிபந்தனைகள் எந்தளவுக்கு மக்களுக்கு நன்மை தரக் கூடியவையாக உள்ளன என்பது தொடர்பிலேயே நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

நாட்டின் அபிலாஷைகளுக்காக மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி சர்வதே நாணய நிதியத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

நாணய நிதியத்திடமிருந்து கடன் தொகைகள் உரிய காலத்தில் கிடைக்கின்றன. நாம் மக்கள் சார்பில் அவர்களிடம் எமது நிலைப்பாடுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *