தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா

சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் (07) காலை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் நடைபெற்ற மேற்படி நிகழ்வு மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து அம்மையாரின் திருவுருவப்படம் தாங்கிய சிறப்பு ஊர்வலத்தை தொடர்ந்து  அம்மையாரின் நினைவாலய வழிபாடு, உருவச்சிலைக்கான மரியாதையளித்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை , வலி – வடக்கு பிரதேச செயலர் சிவகெங்கா சுதீஸனர் கலந்துகொண்டார் விசேட நிகழ்வாக கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நூற்றாண்டு மலர் வெளியீட்டு வைக்கப்பட முதற்பிரதி பெறுபவர் தெல்லிப்பளை. தேவஸ்தானம் தர்மகர்த்தா சபைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (08) மாலை 3.00 மணி முதல் நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்திஜிவிகள், பேராசியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 மேலும் சிவத்தமிழ்ச்செல்வியின் நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் முகமாகதெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான சூழல் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *