![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2025/01/10-1.jpg)
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கு சுங்கத் திணைக்களத்தினால் 33 மில்லியன் ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. திறைசேரியினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.