வடக்கில் முறையற்ற வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம். ஆளுநர் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம்.

வடமாகாணத்தில் உள்ள விளையாட்டு பணிப்பாளர்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது இடமாற்றம் வழங்கியதற்கு எதிராக வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள்  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட 13 வலயங்களில் சில வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணி இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ் வலயத்திற்கு துணக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரை  நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு ஏனைய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

யாழ் வலயத்துக்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்படுபவர் சேவை மூப்பு உடையவராக இருக்க வேண்டும் என்பது  நிர்வாக நடைமுறையாக இருந்து வருகின்ற நிலையில் துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளரை விட பலர் சேவை மூப்பு உள்ளவர்கள் இருக்கும் நிலையில் அரசியல் செல்வாக்கில் இவரது நியமனம் இடம்பெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது  வட மாகாண கல்வி அமைச்சின்  உதவி பணிப்பாளராக இருக்கும் ஒருவரின் மனைவிக்கும் அவரது கணவரின் சிபாரிசில் யாழ்ப்பாண வலயம் ஒன்றில்  நியமனம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகிறது. 

குறித்த முறையற்ற இடமாற்றம் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமா என கேள்வி எழுப்பியுள்ள வலயக் கல்வி பணிப்பாளர்கள் முறையற்ற இடமாற்றத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *