இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல்

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்துள்ளார். 

குறித்த குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது இஸ்ரேலுக்கு விவசாய தொழிலில் இணைவதற்காக விண்ணப்பித்தவர்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, இலங்கையிலிருந்து விவசாய துறைக்காக எதிர்காலத்தில் புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் அவர்கள் அனைவரும் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் தொழில் பொறுப்பு, வேதனம் உள்ளிட்ட சகல விடயங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *