வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று(20) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்துமீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் மூன்று டோலர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி 10 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *