
ரமழான் காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாது என நினைக்கிறேன். அதேபோன்று பரீட்சை காலத்திலும் நோன்பு காலத்திலும் தேர்தல் இடம்பெற்ற வரலாறு எமது நாட்டில் இருக்கிறது என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகாரசபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.




