கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் சீனப் பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
குறித்த பெண்ணின் சடலம் சொகுசு ஹோட்டலின் 22 ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய சீன பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




