சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 25 பேருக்கு கொரோனா!

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன், அவர்களில் ஒருவர் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் என்றும் அவருடைய மனைவி தென்மராட்சி பிரதேச செயகத்தின் கீழ் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தராவார்.

இதேவேளை, குறித்த தொற்றாளர்களை கொரோனா கண்காணிப்புக்கு உட்படுத்த சுகாதாரத்தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply