யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளராக மீண்டும் சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை மீண்டும் பொறுப் பேற்றுக் கொண்டார் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த வைத்தியர் சத்தியமூர்த்தி மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் இன்று தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply