புத்தளம் மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

 

பொது பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச அதிகாரிகளை உள்ளடக்கி ஒரு சிறப்புத் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், புத்தளம் மாவட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்றம் சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் திங்கட்கிழமை (22) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம். சில்வா உட்பட அரச அதிகாரிகளும், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண உட்பட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், முப்படையினர் ஆகியோருடன்  புத்தளம் மாவட்ட மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 226 கிராம சேவையாளர் பிரிவுகளையும், சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 322 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. 

இந்தக் குழுக்களின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள செயல்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் புதிய திட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் குழுக்களை எவ்வாறு திறம்பட செயல்படுவது என்பது குறித்து பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல அறிவுறுத்தல்களை வழங்கினார். 

நாட்டில் பொதுவாக போதைப்பொருள் சோதனைகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்தும் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இங்கு விளக்கினார்.

மேலும், போதைப்பொருளை கட்டுப்படுத்த சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் அவர் குறப்பிட்டார்.

அத்துடன், கிராம மட்டத்தில் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் மற்றும் வழமைக்கு மாற்றமான செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதன் அவசியம் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், தேவையான அறிவுறுத்தல்களும் இதன்போது பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *