யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

<!–

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை – Athavan News

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்பாய்  பகுதிகளில் பணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதுடன், வீதிகளில் சுகாதார நடைமுறையினை பிற்பற்றாது, வியாபார நடவடிக்கை முன்னெடுக்கின்றமையினால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே,  அதனை தடுக்கும்  முகமாக  இன்று (வெள்ளிக்கிழமை) காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோப்பாய் பொலிஸாரினால்  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அத்தியாவசிய சேவை தவிர்ந்து வீதியில் பயணித்தோர் மற்றும் பயணத்தடை வேளையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுப்டோரின் விபரங்கள்  பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்குட்படுத்தும் செயற்பாடு  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply