கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலைக்கு புதிய உள்நோயாளி விடுதி!

கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில், உள்ளக பெண்கள் நோயாளர் விடுதிக்கான (உள்நோயாளி பிரிவு) அடிக்கல் நாட்டு விழா இன்று (10) காலை 11.00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியின் கீழ், இதற்கென 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட நிகழ்வு, கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் A.W.M. மாஸாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.D.M.G. திசநாயக்க, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.நபீல் மற்றும் கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் ஆகியோர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு, பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிண்ணியா தள வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் 

எம். ஏ. எம். ஜிப்ரி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமனவின் பிரத்தியேகச் செயலாளர் சாமர சம்பத், மேலும், கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த புதிய உள்ளக நோயாளர் விடுதி அமைக்கப்படுவதன் மூலம், கிண்ணியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த ஆயுர்வேத சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தங்கி நின்று சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இனிமேல் தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply