துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி!

துறைநீலாவணை நிருபர்.

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் 13.09.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டி நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும்,  வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

இதில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள்வெற்றிவாகை சூடி வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசையும் தட்டிக் கொண்டனர்.

இவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் பணப் பரிசு என்பவற்றை இந் நிகழ்வில் பிரதம அதியாக கலந்து சிறப்பித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் கௌரவ சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்த பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் தொழில் நுட்ப உத்தியோகத்தர் இ.சுதர்சன் சிவஸ்ரீ நாகராசா குருக்கள் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கழகங்கள் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply