மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கிருமிகள் கலந்த நீர் மற்றும் சேறு மூலம் தோலில் உள்ள காயங்கள் அல்லது கண், மூக்கு, வாய் வழியாகப் பரவக்கூடும். 

திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி, கண்கள் சிவத்தல், வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

சிறுநீர் குறைதல், மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல் மற்றும் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வயல் மற்றும் சேற்றுப் பகுதிகளில் பணியாற்றுவோர் பாதுகாப்புக் காலணிகளை அணிவதுடன், மாசுபட்ட வெள்ளநீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், தடுப்பு மாத்திரைகளையும் மருத்துவ ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply