20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது ருவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதற்மைக, நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரையில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply