ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டிற்கு  கொண்டுவரப்பட்டதாக  விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் தற்காலிகமாக விமான நிலைய களஞ்சியசாலையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply