“இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பொலிஸாரின் பங்களிப்பு அவசியம்”

<!–

“இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பொலிஸாரின் பங்களிப்பு அவசியம்” – Athavan News

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கையை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எழுச்சியை கண்காணிக்கும் விடயத்தில் பொலிஸார் மேலதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் பொலிஸார் பெரும் சேவையை ஆற்றினர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது ஒரு கொள்கை என்றும் அந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஒருவரை அடையாளம் காண்பது கடினமாகும் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.


Leave a Reply