அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!

அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!

அடிப்படைவாதக் கொள்கையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகத் தேடி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இத்தகைய நபர்களை இனங்காண பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதக் கொள்கைகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் சில அமைப்புகளை தொடந்தும் கண்காணித்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply