வடமராட்சி முள்ளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளியில் நேற்றிரவு(26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – புலோலி வீதியில் பயணித்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முள்ளிப் பாலத்தில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் நெல்லியடியைச் சேர்ந்த 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply