
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ‘அரண்’ சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது.

(ஏ. எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ‘அரண்’ சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று (28.10.2021) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் சுகுணன் தலைமையில் காலை, மாலை என இரு கட்டங்களாக இடம்பெற்றன.
இந்த வெளியீட்டு விழாவில் முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம், பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான உமாவரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சஞ்சிகை பற்றி கருத்துரைத்தனர்.
சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம். பி. அப்துல் வாஜித் சஞ்சிகை வெளியீட்டு உரையை நிகழ்த்தினார்.
பொதுமக்களை பாதுகாக்கும் காவலரணாக சுகாதார தரப்பு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தடையின்றி தமது சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். என்ற உன்னத நோக்கத்தில் இந்த ‘அரண்’ சஞ்சிகை காலாண்டுக்கு ஒருமுறை வெளிவரும் என வைத்திய பணிப்பாளர் இங்கு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிராந்திய வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள். சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரச நிர்வாக அதிகாரிகள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், புத்திஜீவிகள் சுகாதாரப் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
20 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சஞ்சிகை ஒன்று வெளியீட்டு வைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





