
கொழும்பு,ஒக் 04
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய (04) பாராளுமன்ற அமர்வின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னரான நகல் ஒப்பந்தம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக பலமுறை கேட்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவைத்தலைவர் மற்றும் நிதி அமைச்சினால் அந்த விடயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் குணவர்தன மேலும் கூறினார்.





