கிம்புலா எல்ல குணாவின் நெருங்கிய சகா கைது!

வெளிநாட்டில் இருந்து பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்களை முன்னெடுத்து வரும் கிம்புலஎல்ல குணா எனப்படும் சின்னையா குணசேகரனின் நெருங்கிய உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 43 வயதான கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தருணத்தில் குறித்த நபரிடம் இருந்து 76 கிராம் ஐஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply