கோட்டா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவே, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply