<!–
யூரியா உர ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இக்கலந்துரையாடலை நாளை (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யூரியா உரத்தை கொள்வனவு செய்யும் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான தேசிய பணியாக கருதி இந்த நடைமுறை தொடர்பான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


