வவுனியாவில் 57.02மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் இன்று அதிக மழை வீழ்ச்சியான 57.02 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்கள அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (10) காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் மழை வீழ்ச்சியான 57.02 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பிற்பகல் 2மணியின் பின்னர் அதிக மழைபெய்யதுடன் இரவு வரை மழை பெய்து வருகின்றது.

மாலை வேளையில் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் இக்காலப்பகுதியில் பொது மக்கள் மிகுந்த அவதானமுடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதான வீதிகள் உள்ளக வீதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றதை காணமுடிந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply