அழகில் லாஸ்லியாவை தூக்கி அடிக்கும் யாழ் ஜனனி; பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் ஒருவர் கலந்துகொள்வது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் இலங்கையர்களும் இந்த நிகழ்வை ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என்று விஜய் டிவி கணித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் இதுவரை தங்கள் கணிப்புகளை பொய்யாக்கவில்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்ஷனைத் தொடர்ந்து பிக்பாஸ் 6ல் களம் இறங்கியுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி.

ஜனனி இந்த நிகழ்ச்சியில் நுழைந்த அன்றே பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்றே கூற வேண்டும்.

21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவர் ஆரம்பத்தில் டிக் டோக் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமானார் மற்றும் சில குறும்படங்களில் நடித்தார் மற்றும் ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

அவர் இன்ஸ்டாகிராமில் சுமார் 18.3k பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் மற்றும் இலங்கையில் ஒரு மாடலாகவும் உள்ளார்

இதேவேளை, இலங்கையின் பாரம்பரியத்துக்கும் பெருமைக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சி துறையில் பிரபலமான கலைஞர்களுடன் போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். .

அதே சமயம் லாஸ்லியாவை கொண்டாடியது போல் ஜனனிக்காக அவரது ரசிகர்கள் பட்டாளமே ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், லாஸ்லியாவை தனது அழகால் அடித்து நொறுக்கி விடுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply