மலையகத்தில் சிறுநீரக நோயாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!

மலையகத்தில் சிறுநீரகப் பிரச்சினைகளால் பெரும் அவதிக்குள்ளாகும் மலையக நோயாளர்கள் பலர் டயாலிசிஸ் சிகிச்சைக்காக கண்டி அரசினர் வைத்தியசாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனால் காலநேரம், பணவிரயம் ஏற்படுகின்றது.

இது போன்ற மிக முக்கியமான விடயங்களைக் கவனிக்க மலையக அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இன்றைய மோசமான பொருளாதார சூழ்நிலையில் மலையக மக்கள் இச்சிகிச்சைக்காக பெரும் தொகைப் பணத்தை செலவழித்துக் கொண்டு தனியார் வாகனங்களிலோ அல்லது அரசுப் பேருந்துகளிலோ கொழும்பு, கண்டி என்றெல்லாம் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே நுவரெலியா மாவட்டத்தின் 13 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் வாழும் மக்களின் நன்மை கருதியும், சிறுநீரகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் நுவரெலியா, கிளங்கன் போன்ற வைத்தியசாலைகளில் உடனடியாக இச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மலையக மக்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு காலந்தாழ்த்தாமல் ஆவன செய்யப்பட வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply