கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகைகள் முதல் தடவையாக “திறன்மிகு ஊழியப் படையால் தொழிலுலகை வெல்லுவோம்’ என்னும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிற் கல்விச் சந்தை முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொழிற் கல்விச் சந்தை முகாம் மட்/ சிவாநந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடை பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி N.புள்ளைநாயகம் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் வளையக்கல்வி பணிப்பாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தனர்.
இத் தொழிற் கல்விச் சந்தையினூடாக, உயர்தரப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களது உள்ளார்ந்த திறன்களை இனங்காணவும், ஏனையோர் உயர்கல்வி வாய்ப்புகளை அறியவும், திறனை வளர்க்கத்தக்க தொழிற் பயிற்சி நிலையங்களை அடையாளம் காணவும், தொழில் வழங்குனர்கள் மற்றும் சுய முயற்சியாளர்களைக் கண்டறிய எதுவான வழிகாட்டல்கள் துறை சார்ந்த பல் துறை நிறுவனங்களால் அங்கு வழங்கப்பட்டன.
இதன் போது ஏராளமான உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள், உயர் கல்வியை தொடரவிருக்கும் இளைஞர்கள்,தொழிற் திறனை வளர்க்க ஆர்வமாய் உள்ளோர், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவுள்ளோர் மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தேடுவோர் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






