யாழில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுடன், 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *