ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறையில் கைது!

<!–

ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறையில் கைது! – Athavan News

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த ஜேர்மன் பிரஜை நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை இன்று திங்கட்கிழமை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

களுத்துறை-வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply