
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகத்தினரால் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடத்தப்படவுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை ஆஸ்பத்திரி வீதிக்கு முன்னாள் கொமர்சல் வங்கிய இயங்கிய இடத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதன்போது நீரிழிபுப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, உடல்திணிவு சுட்டிப் பரிசோதனை, கண்பரிசோதித்து வாசிப்பு கண்ணாடி இலவசமாக வழங்கல் மற்றும் நீரிழிவு தொடர்பான அறிவுரைகள் என்பன இடம்பெறவுள்ளன என யாழ்.நீரிழிவுக்கழகம் அறிவித்துள்ளது





